இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு!

Saturday, March 14th, 2020

இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் கடற்றொழில் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாக
இருக்கின்றது என
வாழைச்சேனை
பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைசேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த துறைமுகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


மேலும் கடந்த காலங்களில் தாம் பல்வேறு பிரச்சினைகளுடன் தீர்வின்றி இருந்தபோதும் குறித்த துறைசார் பொறுப்பு மிக்க பதவியிலிருந்தவர்கள் எம்மை கண்டுகொள்ளாதிருந்தனர். ஆனால் நீங்கள் எமது பிரச்சினைகளை ஆரய்த்து கொள்வதற்காக நேரில்வந்தது ம்ட்டுமல்லாது வேற்றுமைகளோ பேதமைகளோ காட்டாது அனைவருக்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என செயற்படுவது தமக்கு மன நிறைவைக் கொடுக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினர

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறித்துகொண்டபின் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நம்பிக்கையுடன் எனக்கு வழங்கியிருக்கும் இந்த கடற்றொழில் அமைச்சு பொறுப்பு அனைத்து மக்களின்
எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில்
பயன்படுத்தப்படும் என்று வாழைசேனை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...