அந்நியர் ஆட்சியின்போது இலங்கைத்தீவை அளவுகடந்து நேசித்தவர்கள் தமிழ் மக்களே!

அன்னியர்களின் காலனியாதிக்கத்தின் கீழ் நாம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஒன்று பட்ட இலங்கைத்தீவின் அழகை இரசித்து பாடியவர்கள் தமிழ் கவிஞர்களே என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வரவு செலவு திட்ட நிறைவுநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
அழகிய எங்கள் இலங்கைத்தீவானது இங்கு வாழும் அனைத்து இன மத சமூக மக்களுக்கும் சொந்தமானது. பெரும்பான்மை என்றும் சிறுபான்மை என்றும் இங்கு பேதங்கள் எவையும் இருப்பதை நாகரிக உலகம் ஒரு போதும் ஏற்காது.
அன்னியர்களின் காலனியாதிக்கத்தின் கீழ் நாம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஒன்று பட்ட இலங்கைத்தீவின் அழகை இரசித்து பாடியவர்கள் தமிழ் கவிஞர்களே.,
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”
என்று பாடியவனும் தமிழ் கவிஞனே.
வீடு தோறும் இரப்பவர்க் கெல்லாம்
மாணிக்கம் அள்ளிப் பிச்சை கொடுத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
என்று பாடியவனும் தமிழ் கவிஞனே.
இவ்வாறு அழகிய எங்கள் இலங்கை தீவையும் ஒன்று பட்ட இலங்கை தேசியத்தையும் தமிழ் பேசும் மக்களும் அளவு கடந்து நேசித்து வந்தனர்.
ஆனாலும் 1948 இல் இருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இந்த நாட்டின் கடந்த கால அரசுகள் யாவும் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே புறந்தள்ளி வந்திருக்கிறார்கள் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|