இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 16th, 2020


இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றபோதும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பாவித்து கடல் வளங்களையும் அழித்தும் வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறலாமமென எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது,

இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு சுமூகமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நாம் ஆட்சியில் இருந்தபோது ஆரம்பித்திருந்தோம். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஆட்சிப் பீடம் ஏற்றப்பட்ட ஆட்சியாளர்கள் இவ்விடயத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவில்லை.

மீண்டும் எமது ஆட்சி அமையப் பெற்றுள்ள நிலையில், மீன்பிடி அமைச்சராக பாரிய பொறுப்பை இந்திய மீன்பிடியாளர்களின் பிர்ச்சினை மட்டுமல்லாது, மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் வாழ்வை வளப்படுத்திக் கொடுக்க நான் பாடுபடுவேன் என்ற நம்பிக்கையில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Related posts:

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
கட்சி உட்பூசல்களை மக்களின் பாதிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டாம்! டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரி...