இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல – அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, February 5th, 2018

நான் பல தடவை இந்தியாவுக்குச் சென்று அங்கு மத்திய அரசுரடனும் தமிழக அரசுடனும் பேசியிருக்கின்றேன். இந்தப் பயணங்களின்போது எமது மக்களுக்காக நான் மிகப்பெரும் உதவித் திட்டங்களை எல்லாம் பெற்றுவந்து கொடுத்திருக்கின்றேன்.

அன்று நான் இந்தியாவுக்கு சென்றபோது தேடப்படும் குற்றவாளியாக இருந்திருந்தால் அன்றே என்னை கைது செய்திருக்கலாம். ஆனால் இன்று அந்தச் சம்பவத்தை வைத்து சில தமிழ் பத்திரிகைகள் விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றமையானது அவர்களது இயலாத் தன்மையை எடுத்தியம்பி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்பரை கூட்டத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தேலும் தெரிவிக்கையில் –

இந்திய தேசத்தால் நான் தேடப்படும் ஒரு குற்றவாழியாக இருந்திருந்தால் கடந்த ஆட்சிக்காலத்தின் போது இந்தியாவுக்கு சென்றிருந்த சமயம் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையோ வடக்கு நோக்கி  காங்கேசன்துறைக்கானதும் மன்னார் வரையுமானதான புகையிரதத்தையோ, யாழ்ப்பாணத்தில் இன்று தலை நிமிர்ந்துவரும் கலாசார மண்டபத்தையோ, துரையப்பா விளையாட்டரங்கையோ, வடகடல் நிறுவனத்தையோ அன்றி அச்சுவேலி தொழிற் பேட்டையையோ, கைதடியிலமைந்துள்ள பனை ஆராட்சி நிறுவனத்தையோ பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கம் சம்மதித்திருக்குமா?

அன்றி எமது பகுதி விவசாயிகளுக்காக பல நூறுக்கணக்கான உழவு இயந்திரங்கள், பாடசாலை மாணவர்களுக்கான பல ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள், வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக நல்லினப் பசு மாடுகள், புதியவகை நல்லின பயன்தரு மரக்கன்றுகள் என பல உதவிகளை இந்திய அரசிடமிருந்து  என்னால் பெற்றிருக்க முடியுமா?

அந்தவகையில் சூளைமேட்டு சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு எனது நற்பெயருக்கும் கட்சிக்கும் கழங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது எங்கள் தேர்தல் வெற்றியை மழுங்கடிக்கும் நோக்கில் அந்தப் பத்திரிகையின் திட்டமிட்ட செயலாகவே நான் நோக்ககின்றேன்.

இன்று நேற்றல்ல இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிட்ட வகையில் சக தமிழ் கட்சிகளாலும் சில தமிழ்ப் பத்திரிகைகளாலும் சுமத்தப்பட்டு வருகின்றமை வழமையானதுதான். இருந்தபோதிலும் இந்தத் தேர்தல்காலத்தில் குறித்த பத்திரிகை எமது வெற்றியை தடுக்கும் நோக்கில் செய்தி வெளியிட்டிருந்தாலும் அது நிச்சயம் எமக்கு ஒருபோதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

ஏனெனில் மக்கள் தற்போது உண்மை நிலைய நன்கு தெரிந்துவைத்துள்ள காரணத்தினாலும் முதுகில் காயம் உள்ளவனே காட்டுக்குள் செல்ல பயப்படுவான். ஆனால் எனக்கு முதுகில் காயம் இல்லை என்பதால் நான் இவ்வாறான சேறு பூசல்களுக்கு பயப்படப்போதும் இல்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...
படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...