இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவிப்பு!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதேவைள நேற்றும் கூட இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் படகு ஒன்றுடன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, எரிபொருள் பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள், நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பில் தாமும் இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண கடுமையாக முயன்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் இதற்கான தீர்வைக் காணமுடியும் என்றும் நம்பிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|