இந்தியாவிலிருந்து பொருட்கள் – நாணயமாற்று விடயத்தில் மட்டுமே தாமதம் – தீர்வு கிட்டியதும் காங்கேசன்துறைக்கு கப்பல் வரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையில்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை காங்கேசன்துறை ஊடாக இறக்குமதி செய்வதன் மூலம் வடக்கு மாகாணம் மட்டுமின்றி வடமத்திய மாகாணமும் நன்மை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இதனிடையே இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆதரவு கிடைத்துள்ளதா என ஊடகவியலாளர் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறுகையில் – அதில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. அதுவும் பெறப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வ...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!