இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை – பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால், டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Saturday, June 18th, 2022

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கெசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து இன்றையதினம் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து குறித்த பகுதிகளின் கள ஆய்வை மேற்கொள்ள இன்றையதினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரதத்தில் வருகைதந்திருந்த துறைசார் அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றிருந்தார்.

இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களும் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

முன்பதாக இந்தியாவின் பாண்டிச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து மற்றும் பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து போன்றவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயத்தினை பிரஸ்தாபித்திருந்தார்.

இதையடுத்து குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த போக்குவரத்துக்களை செயற்படுத்துவதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய துறைசார்  அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து காங்கேசன்துறை மற்றும் பலாலி ஆகிய  இடங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளும...
வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...