இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Friday, September 10th, 2021

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி அத்துமீறிய சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் பின்பற்ற செயற்பாடுகள் தொடர்பான  ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்

குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் காலை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதேவேளை வாகரை களப்பு அபிவிருத்தி திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பாக ஆர்வம் செலுத்தி வருகின்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து குறித்த திட்டம் தொடர்பான இதுவரையான செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பும் இன்று முற்பகல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்! - டக்ளஸ் தேவானந...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...