இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Tuesday, February 8th, 2022இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.
தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
முன்பதாக
இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.
மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் முன்பாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|