இதர சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விடப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018

தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவே எமது மக்களின் தீராது தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நாம் தீர்வு காண முயற்சித்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற மன்னார் மாவட்டம் மாந்தை பிரதேச வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

காலத்திற்குக் காலம் போலித் தேசியம் பேசி தமிழ் மக்களது வாக்குகளை அபகரித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும் இருப்பதுடன் தமது சுகபோகவாழ்வை உறுதிப்படுத்திக்கொள்வதுடன்  தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசுகள் மீது குறைகளை சுமத்தி சுயலாப அரசியல் நடத்திவருகின்றனர். ஆனாலும் இந்த சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விட போவதில்லை.

அந்தவகையில் மக்கள் எந்தளவிற்கு எமது அரசியல் பலத்தை பலப்படுத்தி, நாம் முன்னெடுத்துவரும் வழிமுறைக்கு வலுச்சேர்க்கின்றார்களோ அந்தளவிற்கு மக்கள் மத்தியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, நிலையான நம்பிக்கையூட்டும் வகையிலான வாழ்வை நோக்கி உங்களை அழைத்துச்செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அந்தவகையில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயநலவாதிகளின் பீடிப்பிலிருந்து விடுபட்டு எமக்கான ஆதரவுப்பலத்தை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கை கொள்கின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அர...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
மீன் வள ஆய்வுகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சு - இலங்கைக்கான நோர்வே தூதரகம் இணைந்து நடவடிக்கை!

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் – நல்லூரில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...
உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!