இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Friday, June 26th, 2020

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேசம் என்பது இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியாக பயன்டுத்திக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக நம்பி இருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரம்பன் கிழக்கு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாகவும், பூகோள அரசியல் நகர்வுகளை பயன்டுத்தியும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப் போதாக சில தரப்புக்கள் தெரிவிப்பதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், குறித்த கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் செயல் எனவும் சாடினார்.

அத்துடன், முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்த போது திரும்பியும் பார்க்காத சர்வதேசம் இனியும் வரப்போதில்லை எனவும், அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பது போன்று எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

Related posts:


அரச பணியாளர்களுக்கு இருமொழி தேர்ச்சி அவசியம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது - டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் ...
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...