ஆழ்கடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் – தொலைபேசியில் உரையாடினார் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா!

Tuesday, March 22nd, 2022

கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சின் முன்பாக  ஆழ்கடல் தொழிலில்  ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டால் தாம் அடைந்துவரும் இடர்களை நீக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் நின்றிருந்த கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் ஸ்ராலின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடியதுடன் யாழில் தங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தொலை பேசியில் உரையாடும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுந்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு யாழ் தலைமைக் காரியாலயத்தில் தங்கியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, உடல் நிலையிலும் உள நிலையிலும் எந்தவித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தும் தனது மக்கள் பணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வழமைபோல் உற்சாகத்துடன் தொலை பேசியில் உரையாடினார்.

விரைவில் தான் நேரில் வந்து சந்திப்பதாகவும் நிலமைமைகளை விளக்கி தீர்வு பெற்று தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின்உறுதி மொழிகளை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை ஆழ்கடல் மீன்பிடித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

000

Related posts: