ஆழப்பெருங்கடலில் தத்தளித்த மக்களை கரையேற்றிய கப்பல் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 10th, 2016

ஆழப்பெருங்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எமது மக்களை கரையேற்றிய கப்பலாக நாம் உங்களுக்கு பெரும்பணியாற்றியிருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த கப்பலை பயன்படுத்தி கரையேற வேண்டியது தமிழ் மக்களாகிய உங்களத ஆற்றலில் தான் தங்கியிருக்கிறது – என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்த உரையாற்றுகையில் –

போர்க்கால சிதைவுகளில் இருந்து எமது தேசத்தை மீட்டெடுக்க நாம் உழைத்த போது, எமது கல்விச்சமூகத்தின் அபிவிருத்திக்காக நாம் ஆற்றிய அரும்பணிகளின் போது, குறிப்பாக யாழ் மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு நாம் தோள் கொடுத்து நின்ற போது, அவற்றிற்கெல்லாம் பாரிய பங்களிப்பை ஆற்றியிருந்தவர் இன்றைய எமது ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா அவர்கள்.

கடந்த காலங்களில் எமது மக்களின் நிலங்களை நாங்கள் மீட்டுத்தந்த போது,. சிறைக்கைதிகளை நாம் விடுவித்து தந்த போது, போக்குவரத்து பாதைகளை நாம் செப்பனிட்டு தந்த போது, புகையிர பாதைகளை அமைத்து தந்த போது, கிளிநொச்சி அறிவியல் நகரை பொறியியல் பீடமாக நாம் மாற்றித்தந்த போது.வீடமைப்பு திட்டங்களை நாம் வழங்கிய போது,வாழ்வாதார திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிய போது, எமது வாழ்விடங்களின் உட்கட்டுமான பணிகளை நாம் முன்னெடுத்த போது, எமது பகுதியின் விவசாயத்தை அபிவிருத்தி செய்தபொது,, மருத்துவம் துறையையும் வைதத்தியசாலைகளையும் மேம்படுத்தியபோது ,கடல் உற்பத்திகளை அபிவிருத்தி செய்தபோது, கல்விச் சேவைகளை முன்னெடுத்தபோது, நீதித்துறைகளையும் சிவில் பாதுகாப்புகளையும் வலுப்பெற்றுக்கொடுத்தபோது, பனைவளம் உள்ளிட்ட இன்னோரன்ன அபிவிருத்திகளை மேற்கொண்டபோது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்து இவைகளுக்கு எல்லாம் அங்கீகாரம் வழங்கி, எம்மை ஊக்குவித்து, எமக்கு உறுதி கொடுத்தவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறீ சேனா அவர்கள்.

அவரே இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்றால் ஜானதிபதி அவர்கள் எமது கல்வி சமூகத்தின் தேவைகளை இன்னமும் அதிகமாக பூர்த்தி செய்வார் என திடமாக நம்புகிறேன்.

தமிழ் பேசும் மக்களின் மன விருப்பங்களையும் அவர்கள் தாங்கி நின்ற மன வலிகளையும் உணர்ந்து கொண்டவராக ஜனாதிபதி அவர்கள் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவார் என்பது எமது மக்களின் நம்பிக்கை. ஆழப்பெருங்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எமது மக்களை கரையேற்றிய கப்பலாக நாம் உங்களுக்கு பெரும்பணியாற்றியிருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த கப்பலை பயன்படுத்தி கரையேற வேண்டியது தமிழ் மக்களாகிய உங்களது ஆற்றலில் தான் தங்கியிருக்கிறது. இதில் மாணவர்களாகிய உங்களுக்கும் பங்குண்டு.  என தெரிவித்தார்.

02

Related posts: