ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018

எமது பகுதிகளில் மக்கள் பயன்பெற வேண்டிய அரச நிறுவனங்களில் செயற்றிறன் என்பது பொதுவாக குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் போதிய ஆளணிகள் இன்றிய குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றது. மேலும், நிரப்பப்பட வேண்டிய ஆளணி வெற்றிடங்களுக்கு தென் பகுதிகளைச் சார்ந்தவர்கள் நிரப்பப்பட்டு வருகின்ற நிலையில்; மொழி மற்றும் சூழல் – குறிப்பாக பிரதேச பரிச்சயமற்ற காரணங்களாலும் அரச நிறுவனங்களின் பயன்பாடுகளை பெறுவதில் எமது மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எனவே, இத்தகைய பாதகங்கள் இனங்காணப்பட்டு, அவற்றை அகற்றுவதன் ஊடாகவே எமது பகுதிகளில் அரச துறை சார்ந்த நிறுவனங்களால் போதிய பயன்களை எமது மக்களுக்கு வழங்க முடியும். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பொறுத்த வரையில் ஏனைய மாகாண சபைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் உள்ளூராட்சி மன்றங்களுடன் எமது பகுதி – குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மாகாண சபையையோ, அல்லது வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளையோ அடைவு மட்டத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

ஏனைய மாகாணங்களைப் பொறுத்த வரையில் மாகாண சபைகளும், உள்ளூராட்சி சபைகளும் மக்கள் நலன்சார்ந்து செயற்பட்டு வருகின்ற போதிலும், எமது பகுதியில் அது தொடர்ந்தும் மக்கள் நலன் சாராத செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றன. அதாவது, மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட்டு, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக மக்களை மேலும், மேலும் உணர்வுப்பூர்மாகத் தூண்டியும், சீண்டியுமே வருகின்றன.

மறுபக்கத்தில் ஏனைய மாகாணங்களுக்கு மத்திய அரசின் நேரடி பங்களிப்புகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், வடக்கில் அந்த நிலை அரிதென்றே கூற வேண்டும். ஒன்று மத்திய அரசின் நேரடிப் பங்களிப்புகள் போதியளவு வருவதில்லை. வந்தாலும், அங்கு அவற்றை மேற்கொள்ள விடுவதில்லை என்ற நிலையே காணப்படுகின்றது. எனவே, மக்களது நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்வதை புறக்கணித்து வருகின்ற விருப்பமின்மை, முயலாமை, இயலாமை கொண்டவர்களிடம் எமது பகுதியின் அரச நிறுவனங்கள் மாட்டிக் கொண்டு, செய்வதறியாத நிலைமை தொடர்கின்ற போது, எமது மக்களே மீள முடியாத வாழ்க்கைச் சுமைகளை அரவணைத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைந்தவுடன், எமது மக்களின் விடிவு கருதி வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை இந்த அரசு உடன் நடாத்த முன்வர வேண்டும்.

z_fea800 copy

Related posts: