ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியின் பயனாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்த்தகக் குளம் கடந்த இரு தினங்களுக்க முன்னர் உடைப்பெடுத்தள்டளது. இதன்போது தோட்ட பாதுக்ப்புக்காகச் சென்றிரந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்உட்பட 6 பேர் குறித்த குளத்தின் உடப்பெடுப்பின் காரணமாக வெளியேறமுடியாத நிலையில் சிக்கி மரமொன்றில் ஏறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர் .
இருந்த போதிலும் அவர்களை மீட்க காலைமுதல் மாலைவரை மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்விகண்டிருந்தன.
குறிப்பாக தரைப்படை மற்றும் கடற்படையினர் எடுத்த பகிரத முயற்சிகள் யாவும் தோல்விகண்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது
இதையடுத்து அமைச்சர் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் 6 பேரும் இலங்கை விமானப்படையின் உதவியுடன் உலங்கவானூர்தி மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் தம்மை ஆபத்திலிருந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீட்கப்பட்ட 6 பெரும் நேரில் சென்று தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|