ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவானது தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சின ைகளுக்கு நிரந்தர தீர்வுபெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச ஆலோசனை சபை உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் இப்பகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைப்படுகளில் அதிக பங்களிப்பை மேற்கொண்டிருந்தோம்.

ஆனாலும் அது இன்னமும் முழுமையாக நிறைவுசெய்யப்படாத நிலை காணப்படுகின்றது.

நாம் முன்னெடுத்த பணிகளை தொடர்ந்து செல்வதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்க கோரும் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியில் நீங்களும் பங்காளர்களாக வேண்டும் என்பதே எமது கோரிக்கைதாகும்.அதனூடாக இப்பகுதியின் அனைத்து தேவைப்பாடுகளுக்கும் நாம் தீர்வுகளை கண்டுதருவோம். செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts: