ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018

ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதும், ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதும் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் அக்கறையாக இருந்து வருவதை நான் தவறு என்று கூறவில்லை.

எந்தவொரு அரசியல் தரப்புகளுக்கும் இந்த விருப்பங்கள் இருந்தே ஆகும். ஆனாலும் அதே விருப்பங்களை போல் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுiகியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

இலங்கைத்தீவில் பல தசாப்தங்களுக்கு மேலாக கூர்மையடைந்திருக்கும் பிரதான பிரச்சினையாக இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையே  இருந்து வருகின்றது.

ஆனாலும், இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையாகிய தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை என்பது இன்று வரை தீராப்பிரசினையாகாவே நீடித்து வருகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன்.

Related posts: