ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018

வடக்கு மாகாணசபை அக்கறையெடுத்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் சாத்தியமாகியிருக்கும். அவர்களும் செய்யாமல் செய்யக் கூடியவர்களையும் விடாமல் மாகாணசபையை முடமாக்கி வைத்திருக்கின்றார்கள். அதனால் பாதிக்கப்பட்டிருப்பது எமது மக்களும், இளைஞர், யுவதிகளும்தான் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் இன்றைய தினம் (18.07.2018) கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தமது நிலைமைகளை எடுத்துரைத்தனர்.

சுமார் 800 பேர் வரையானவர்கள் சுகாதாரத் தொண்டர்களாக நீண்டகாலமாக பணியாற்றிவருகின்றபோதும் தமக்கான நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொள்ள நீண்டகாலமாக முயற்சித்து வருகின்ற நிலையில் இதுவரை தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை என்றும், தமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத்தருவதற்கு தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் என்போரோ, மாகாணசபையினரோ எவ்விதமான அக்கறையும் எடுக்கவில்லை என்றும் இதனால் தாம் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருவதாகவும் உருக்கமாகத் தெரிவித்தனர்.

மிகுந்த துரயத்துடனும், நீண்ட நாட்கள் காத்திருக்கும் ஏமாற்றத்துடனும் சந்தித்த சுகாதாரத் தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டுக்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாணசபையை மக்கள் எமது கைகளில் தந்திருந்தால் அல்லது ஆட்சியில் தொடர்ந்து நான் இருந்திருந்தால் உங்களுக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருவதை மாத்திரமல்ல, எமது இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகமைக்கும், ஆற்றலுக்கும் ஏற்றவாறான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன்.

நாடாளுமன்ற அதிகாரத்தை தாம் அனுபவித்துக்கொண்டு, தீர்வுக்குப் பிறகே அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும் என்று கூறுகின்றவர்களும், முதலில் தீர்வு பின்னரே அபிவிருத்தியும், ஏனையவையும் என்று மாகாணசபையைப் பொறுப்பேற்றவர்களும், எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும், யுத்தச் சூழல் காரணமாக அரச வேலைவாய்ப்புக்கான தகமையைபெறமுடியாதவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தொழில் கிடைக்க முயற்சி செய்திருக்க வேண்டும்.

மக்களை துன்பத்திற்குள் தள்ளிக்கொண்டு இருக்கும் பொருளாதாரச் சுமையைப் போக்குவதில் அக்கறையில்லதவர்களையும், இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பகளை ஏற்படுத்திக் கொடுத்து பொருளாதார பலத்தோடு எமது இனம் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளச் செய்யவேண்டும் என்ற விருப்பமற்றவர்களையும் எதிர்காலத்தில் எமது மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எனவே நீண்டகாலமாக நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையோடு போராடிக்கொண்டு இருக்கும் உங்களின் கோரிக்கையை நான் ஆட்சியின் பங்கெடுக்காதபோதும், ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களிடமிருந்து உங்களுக்குச் சாதகமான தீர்வைப் பெற்றுத்தர முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்தார்.

thonder photo 1

thonder 4 thonder 2

Related posts:

பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப...
எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?...
நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏ...