ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் – இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Saturday, June 18th, 2016

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.

அவர்களின் நிலைமையை கவனத்திலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இந்தோனேசியா அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ளார்.

கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என்றும், அப்படி செல்கின்றவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளாக ஏற்றுக் கொள்ளாது என்றபோதும்,ஆட்கடத்திலில் ஈடுபடுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி எமது மக்கள் தமது பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் விற்றும்,பெருந்தொகையான கடன்களை வாங்கியும் ஆபத்தான கடல்வழிப் பயணத்திற்கு தயாராகின்றாரகள்.

எனவே படகில் பயணம் செய்து கடலில் பல ஆபத்துக்களை சந்தித்து இந்தோனேசிய கடற்பரப்பை அடைந்திருக்கின்றார்கள். இப்படியாக ஆபத்தான கடற்பயணத்தை செய்தவர்களில் பல ஆயிரம்பேர் கடலிலேயே பலியாகிப் போயிருக்கின்றார்கள். பலர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்து அகதிளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்;றார்கள்.

எனவே எமது மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும்,அத்தியாவசிய உதவிகளையும் இந்தோனேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவின் குடியகல்வு சட்டங்களை மீறியும் ஆட்களை பொய் வாக்கறுதிகளைக் கூறி அழைத்துவந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகவும்,அதற்குத் துணையாக செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கம் எடுக்கவேண்டும்.ஆனால் கடலில் தத்தளிக்கும் எமது மக்களின் அவலத்தையும்,அழுகையையும் மனிதாபிமான ரீதியாகவே அணுகவேண்டும் என்றும்கோரிக்கைவிடுத்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடிதம் கொழும்பிலுள்ள இந்தோனேசிய தூதுவராலத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ClOwbvfVAAEVWaF

Related posts:


கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன - நாடாளுமன்றில் ...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...