“அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்” யதார்த்ததினை புரிய வைத்தார் டக்ளஸ் தேவானந்தா

Sunday, June 28th, 2020


தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு என்பது தென்னிலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தேசிய நல்லிணக்த்தி்னூடாக
மாத்திரமே சாத்தியமாகும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேசத்தினூடாக அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது பித்தலாட்டம் எனவும் தெரிவித்தார்.
வட மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், “அழுதாலும் பிள்ளையை அவளே
பெறவேண்டும்” என்பது போல எமது பிரச்சினையை நாங்கள் தேசிய நல்லிணக்கத்தின்
ஊடாக தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர எமக்கான பிரச்சினைக்கு தீர்வு வேறு யாரிடமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
சக கட்சிகள் கூறுவது போன்று சர்வதேசத்தின் ஊடாக எதனையும் பெற்றுக் கொ்ள முடியாது என சுட்டிக் காட்டிய அமைச்சர் சரவதேச நாடுகள் அனைத்தும் தங்களது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும், சர்வதேச நாடுகளை சாமர்த்தியமாக கையாள வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இட்லிக்கு சட்ணியைப் போல சர்வதேசத்தை நாம் பயன்படு்த்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...
கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின்; உறவினர்கள் க...

ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்- பொலிஸ்மா அதிபரி...
மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்து...
மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக...