அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்து சமய மதகுருமார் தெரிவிப்பு!

யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது என இந்து சமய மதகுருமார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் போன்று வேறு எந்த தரப்பினரும் இதுவரை இந்து சமயத்துக்கு செய்ததும் இல்லை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை என்றும் தெரிவித்துள்ள இந்து சமய மதகுருமார், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய இந்து சமய மதகுருமார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கான ஆசீர்வாதங்களை வழங்கி கௌரவித்த போதே குறித்த செய்தியினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|