அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா – முல்லை. கேப்பாப்புலவு மக்கள் புகழாரம்!

Monday, October 24th, 2016

வாழ்வியலை இழந்து அநாதைகளாக தத்தளித்தக்கொண்டிருந்த எமக்கு மீண்டும் வளமான வழ்வியலை கட்டியெழுப்பித்தரும் வல்லமைகொண்ட தலைவராகவும் விடிவெள்ளியாகவும் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தாவே என முல்லைத்தீவு கேப்பாபபுலவு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களது அழைப்பின் பிரகாரம் இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த விஜயத்தின் ஒரு அங்கமாக கேப்பாபிலவு மக்களுடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இதன்போதே குறித்த பகுதி மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

4

நடந்த முடிந்த அழிவு யுத்தத்தால் நாம் வாழ்வியலுடன் எமது பிரதேசத்தின் வழங்களையும் முற்றாக பறிகொடுத்து உதவிகளை நம்பி வாழ்பவர்களாக இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தற்போது எமது மாவட்டத்தில நாம்; மீளக்;குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் எமது வாழ்வாதாரத்திற்கு தேவையான எதுவித அடிப்படை வசதிகளுமின்றி பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் கொண்டவர்களாகவே வருகின்றோம்.

ஆயுதப்போராட்டத்திற்கள் சிக்கியிருந்த நாம் அது நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் யதார்த்த சூழலுக்கேற்ப ஒரு அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க் தவறிவிட்டோம்.  ஆயுதப் போராட்ட காலத்தில் எமக்காக குரல் கொடுத்துவருபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று எமக்கு தெரிவிக்கப்பட்ட பரப்புரைகளால் மாற்று வழியின்றி அவர்களை நாம் தேர்தல் காலங்களில் ஆதரிக்க நேர்ந்தது.

5

ஆனால் கூட்டமைப்பினரது சுயநல அரசியலுக்காக ஏமாற்றப்படுகின்றீர்கள் என்ற உண்மையை நீங்கள் அப்போது  எமக்கு எடுத்துச் சொல்லியிருந்த போதும் அவர்கள்து உணர்சிசிமிக்க வீராவேசப் பேச்சுக்களுக்கு சரணாகதியாகிவிட்டோம். இதன் காரணமாக நாம் இன்றுவரை எமது அடிப்படை தேவைகளைகூட பூர்த்திசெய்து கொள்ளமுடியாத சூழ்நிலையில் வாழவேண்டியுள்ளது.

தற்போது நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். எமது மக்களின் உரிமைகளையும் அதனூடாக எமது தேச மக்களது அபிவிருத்திகளையும் யதார்த்தமான வழிகளூடாக பயணித்து எமக்கு பெற்றுத்தருவீர்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாம் எமது பூர்வீக இடங்களில் மீண்டும் மீள்குடியமரவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக உள்ளது. அத்துடன் வாழ்வாதாரம் வீடமைப்பு குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் நாம் நீண்டகாலமாக எதிர்நோக்கின்றோம்.

005

கடந்த தேர்தல்காலத்தில் எமது வாசல் தேடிவந்து வாக்குகளை பெற்று பதவிகளை அலங்கரித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமக்குரிய வாழ்வாதாரத்திற்கான தேவைகளை இன்றுவரை பூர்த்தி செய்து தருவதற்கான எதுவித முன்னேற்பாடுகளையும் ஏற்;படுத்தி தரவில்லை. இதனூடாக நாம் கடந்த காலத்தில் மீண்டும் ஒரு தவறை செய்தள்ளோம் என்பதை தற்போது புரிந்துகொண்டுள்ளளோம்.

கடந்து வந்த பாதையை தற்போது நாம் சீர்செய்து எமக்கான உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் ஆற்றல் டக்ளஸ் தேவானந்தா என்னும் தன்னலமற்ற உங்களிடம் இருப்பதை கண்டுகொண்டுள்ளோம். இதனால் எமது மக்களுக்கு வாழ்வியல் வசந்தங்களை உரிமைகளையும் வென்றெடுத்துத்தரும் விடிவெள்ளியாக உங்களை பார்க்கின்றோம்.

3

அத்துடன் தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்டு எமது தேவைகளைப் பூர்த்தி செய்துதருமாறு கோரிக்கை விடுத்ததுடன் எமது மாவட்டத்திற்கான உங்களது வரவு எமது பிரதேசம் அபிவிருத்தியுடன் கூடிய  வளமான தேசமாக உருவாகும் என்ற நம்பிக்கையை தமக்கு எற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த பகுதி மக்களது கருத்துக்களையும் அவர்களது குறைகளையும் கேட்டறிந்து கொண்டபின்னர் கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா – தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எம்மால் உடனடித் தீர்வுகளாக எதனையும் பெற்றுத்தர முடியாத போதிலும் கூடிய விரைவில் துறைசார் அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடிப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: