அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடித் தீர்வு!

Tuesday, January 19th, 2021

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முன்பதாக அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளை கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும் தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிடட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் - வ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...