அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும்  என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனூடாக தன்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

வவனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் –

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

1997 ஆம் ஆண்டிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து சில பீடங்கள் வவுனியா வளாகத்திற்கு மாற்றப்பட்டு அது வவுனியா வளாகமாக இயங்கிவந்தது.

இந்நிலையில் அந்த வளாகம் இந்த மாதம்முதல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

இதேநேரம் வன்னியுடன் யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் இல்லாத காலங்களில் இந்த வவுனியா வளாகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டதுதான் இந்த வளர்ச்சிக்கான சாத்தியமாகி இருக்கிறது.

வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச, பிரதமரர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்று கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்த முயற்சியும் விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது எனது அரசியல் அணுகுமுறை எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து எமது எதிர்பார்ப்புகளை நோக்கி படிப்படியாக நகரமுடியும் முடியும் என்ற அணுகுமுறையே சாத்தியமானது என்பதை நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கூறிவருகின்றேன்’ என்றும் அவர் கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க மு...
அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் - ட...
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...