அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019

நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது கடல்தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவரும் அராலி கிழக்கு மினங்குப்பிட்டி வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் கடல்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுவதற்கான ஆரம்ப நிகழ்வுகளை கடல்தொழில் மற்றும் நீரியல் வளஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இன்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கடல்தொழிலை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதியின் கடல் தொழில் இறங்கு துறைக்கு செல்லும் வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படாது தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த குறித்த வீதி குறித்த பகுதி கடல்தொழிலாளர்களது கோரிக்கைக்கு அமைய புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக கடல்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு சுமார் 25 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதன் அடிப்படையில் 903 மீற்றர் நீளமான வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளாக கவனிப்பாரற்று காணப்பட்ட குறித்த வீதி இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் செப்பனிடுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...