அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020

குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான நீர்த்தாங்கி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த அராலித்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீர்த்தாங்கிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 17.07.2020 அன்று அராலித்துறை மக்களை சென்று சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது அப்பகுதி மக்கள் தமது பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதனடிப்படையில் இன்றையதினம்  அப்பகுதி மக்களின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்யும் வகையில் 6 நீர்த்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நீர்த்தாங்கிகளை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் அப்பகுதி மக்களிடம் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்த்தாங்கிகளை பெற்றுக்கொண்ட மக்கள் கொடுத்த வாக்குறுதியை ஒரு வாருத்துக்குள் நிறைவு செய்து கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை வரவுள்ள தேர்தலில் பலப்படுத்த தமது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் - டக்ளஸ் எம். பி. ...
உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல...
கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தே...

சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்...
அப்பாவி மக்களை நினைவு கூருவதையோ அல்லது அவர்களுக்காக கஞ்சி பருகுவதை நான் ஒரு போதும் விமர்சிக்கப் போவத...