அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, November 17th, 2017

நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

அரசாங்க சேவை ஆணைக்குழு இன்று செயற்பாட்டில் இருக்கின்ற நிலையில், அரச நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் என்பவை யாவும் மேற்படி ஆணைக்குழு மூலமாகவே இடம்பெறுகின்றனவா? என்ற கேள்வியும் எமது மக்களிடையே இல்லாமல் இல்லை

அண்மைக்கால கல்வித்துறை சார்ந்த நியமனங்கள், பதவி உயர்வுகள், சமுர்த்தி துறைசார்ந்த நியமனங்கள் போன்றவை தொடர்பில் எமது மக்களிடையே மேலும்  விரக்தி நிலை ஏற்பட்டு வருவதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

என்பதை இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

பொதுவாகவே இந்த நாட்டு மக்களிடையே அரச நியமனங்கள் தொடர்பில் பல காலமாக நிலவி வந்திருந்த அதிருப்தி நிலையானது, சுயாதீன அரசாங்க சேவை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் தொடர்வதையே ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, சிக்கல்களுக்குக் காரணமாகின்றன. அந்தவகையில,; முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களால் கொண்டுவரப்பட்ட 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்பிலும் இந்த இன விகிகதாசாரம் பேணப்பட வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-5 copy

Related posts:

குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் - மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் ...
வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி – அமைச்சர் ட...