அரச தொழில்வாய்ப்புகளில் – எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் – மன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து

Wednesday, December 6th, 2017

அரச தொழில்வாய்ப்புகளில் – எத்துறைகளாக இருந்தாலும் கட்டாயமாக இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன. – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதை செயல் வடிவில் காட்ட வேண்டும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் உரிமை இருக்கின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதனையும் செயல் வடிவில் காட்ட வேண்டும். தொழில் உரிமையும் அதில் முக்கியமானதொன்று என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை உடனடியாக செயலில் காட்ட வேண்டும்.

மேலும், தற்போது பணியில் இருக்கின்ற அரச சேவையாளர்களது வினைத்திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டியதும், அவர்களை ஒழுங்குற முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியதும் அவசியமாகவுள்ளது. பொது மக்களிடமிருந்து அதிகளவிலான வரிகளை விதித்து, பொது மக்களுக்கு பயனற்ற அரச பணியாளர்களுக்கு அதனை ஊதியமாக வழங்கி வருவதானது எந்த வகையிலும் நியாயமாகாது. அரச ஊழியர்கள் ஒரு நாளில் நான்கு மணி நேரமே அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர் என அண்மையில் எமது கணக்காளர் நாயகம் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அண்மையில், இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தின் ஆய்வின்போது, அரச பணியாளர்களில் 60 வீதமானவர்கள் கடமை நேரத்தில் முகநூல் பயன்பாட்டிற்கென 3 மணி நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் பல மாகாணங்களிலும் வேலைவாய்ப்புகளற்ற நிலையில், பட்டதாரிகள் பலர் காத்திருக்கும்போது, 1 இலட்சத்து 96 ஆயிரத்து 128 அரச பணியாளர்கள் – அதாவது நூற்றுக்கு 17.8 வீதமானவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில்கூட சித்தியடையாதவர்களாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவை அனைத்தும் அவதானத்தில் கொள்ளப்பட்டு, அரச பணியாளர்கள் விடயமானது சீரமைப்பிற்கு – மீள் முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்படல் அவசியமாகின்றது. நிலைபேறு அபிவிருத்தியினை எதிர்பார்த்திருக்கின்ற நாட்டில், வினைத்திறனற்ற அரச பணியாளர்களை வைத்துக் கொண்டு ஒரு அடி கூட முன்னேற முடியாது என்பதை நானிங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் - மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் ...