அரச காணிகள் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை – பல்லவன்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, March 31st, 2023பூநகரி – மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பூநகரி, நாகபடுவான், பல்லவன்கட்டு மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பூநகரி, நாகபடுவான் – பல்லவராயன்கட்டு பகுதியை சேர்ந்த மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|