அரசுடனான நல்லுறவைப் பேணி மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என செயல் வடிவில் காட்டியவர்கள் நாம் – டக்ளஸ் எம்.பி!

மக்களின் உணர்வுகளை மதிக்கும் அதேவேளை அவர்களது தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதிலேயே நாம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாவற்குழி புதிய குடியேற்றத்திட்ட பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக தமக்கான நிரந்தர வீடுகள் பெற்றுக்கொள்வதிலும் அந்தக் காணிகளுக்கான உரிமங்களைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்
கடந்த காலங்களில் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்திலுள்ள மக்களுக்கு நாம் எமது இணக்க அரசியல் நடவடிக்கையூடாக அந்த மக்களுக்கான காணி உரிமங்களை எவ்வாறு பெற்றுக்கொடுத்தோமோ அதுபோன்று இந்தப் புதிய வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்களுக்கும் காணி உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடிவடிக்கையை நாம் முன்னெடுப்போம்.
அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தியே மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நாம் செயல் வடிவில் காட்டியுள்ளோம். ஆனால் இன்று ஆட்சியை தாமே கொண்டுவந்தவர்கள் என்று பிதற்றிக்கொள்பவர்களால் மக்கள் தொடர்ந்தும் அவலங்களைச் சுமந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மக்களாகிய நீங்கள் வீதி விளக்கு பொருத்துதல் சனசமூக நிலைய புனரமைப்பு வீதிப்புனமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தாம் விரைவாக செய்து முடிக்க தயாராக இருக்கின்றோம் என்றும் அதற்கு மக்களாகிய நீங்கள் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முழுமையான ஆதரவுப்பலத்தை வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|