அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் சமுர்த்தியை எதிர்பார்த்து இருப்போருக்கான அரசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு அமைய கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பயனாளிகளுக்கு அரிசியை பைக்கற்றுக்களை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரசியாக்கி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 15,202 பயனாளர்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரசி வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில், கிருஷ்ணபுரம் பகுதியை 687 பயனாளர்களுக்கு இன்றையதினம் அரிசி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. –
Related posts:
|
|