அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 31st, 2020

எம்முடன் அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே சேறு வாரிப் புசுகின்றனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் இன்று நடைபெற்ற மக்களள சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், கடந்த காலங்களில்மேற்கொள்ளப்பட்ட அனைத்து சேறடிப்புக்களும் அரசியல் நோக்கங் கொண்டவை என்பதை வரலாறு நிரூபித்துள்ள நிலையில் தொடர்ந்தும் சேறடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அதுதொடர்பில் தான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் முன்னெடுத்தச் செல்லும் வழிமுறைக்கே இன்று எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் வழி முறைக்கு வந்தவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறி முறைக்கு வர இன்னும் வில்லை. அந்த ஆற்றலையும் அவர்கள் துளியளவும் கொண்டிருக்கவில்லை.

அரசியல் பலத்தோடு இருந்தும் எதையும் சாதிக்க விரும்பாதவர்களின் எடுபிடிகளே போதிய அரசியல் பலமின்றியும் முடிந்தளவு தீர்வு கண்டு வரும் எம்மீது அவதூறுகளை பரப்ப முனைகின்றார்கள்.

அவதூறுகளை எவர் எம்மீது சுமத்தினாலும் எமது மக்களுக்கான எமது உண்மை வழி யதார்த்த அரசியல் பயணம் ஒருபோதும் நின்று விடாது.

எமக்கு எதிராக அவதூறு பரப்புவோர்கள் தங்களது கடந்த கால மக்கள் விரோத வன்முறை அரசியலுக்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள். அது போலவே, எதையும் சாதிக்க முடியாத தங்களது வரலாற்று தவறுகளை மூடி மறக்கவும் முற்படுகிறார்கள். எமது மக்களின் பேரவலங்களை வைத்து சுயலாப அரசியல் நடத்துவோர்கள் எம்மீது கறை பூசி ஒரு போதும் அதில் வெற்றி காண முடியாது.

காகம் திட்டி மாடு சாகாது! மாடு முட்டி விருட்சம் வீழாது, எந்தச் சாத்தான்களாலும் எம்மை அசுத்தப்படுத்திவிட முடியாது என்றும் தெரிவித்த அமைச்சர் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் என்றும் சந்தர்ப்பத்தை எமது மக்கள் இம்முறை தமது எதர்காலத்தக்கான தேர்வாக எண்ணி எமது கரங்களுக்கு அரசியல் அதிகாரத்தை தரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் அது இம்முறை நடந்தேறும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது என்றார்.

Related posts: