அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, August 14th, 2017
அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டமானது சுமார் 06 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகைய நிலையில் இப் போராட்டங்கள்  உரிய தரப்பாரின் அக்கறைக்கு எட்டப்படாமல் இருப்பது எமது மக்களது துரதிஷ;டவசமான நிலைமையாகும்.
எமது மக்களது காணி, நிலங்களை விடுவிப்போம் என வாக்குறுதிகள் வழங்கி, எமது மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்தவர்களும், அவர்கள் ஆட்சி அமைப்பதற்காக அதே வாக்குறுதியை வழங்கி எமது மக்களின் வாக்குகளைப் பெற்று உதவி செய்து, அரசியல் பதவிகளைப் பெற்றவர்களும் இன்று ஆளுக்காள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களே அன்றி, எமது மக்களது காணி, நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக இல்லை.
எமது மக்களுக்கு அவர்களது காணி, நிலங்களே தேவை அன்றி, வெறும் அறிக்கைகளும், மேடைப் பேச்சுக்களும் அல்ல. எனவே, வெறும் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு எமது மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களது காணி, நிலங்களை விடுவித்துக் கொடுப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும். எமது மக்களது பிரச்சினைகள், தேவைகளைத் தீர்க்காமல் வெறும் பதவிகளை மாத்திரம் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதால் அது எமது மக்களுக்கு எவ்விதமான பயனையும் தரப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்....
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...

டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே...