அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Sunday, October 22nd, 2017

மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற நிலைப் பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் எமது கட்சியினூடான செயற்றிட்டங்களை முன்னெடுதுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்றையதினம் (22) நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்ற குறைந்தளவிலான அரசியல் பலத்தைக் கொண்டு வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

ஆனால் ஏனைய மாவட்டங்களில் மக்கள் எமக்கு போதுமானளவு அரசியல் பலத்தை தராததன் காரணமாக எம்மால் அம்மாவட்டங்களில் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எதிர்காலங்களில் மக்கள் சரியான அரசியல் தலைமையாக எம்மை  ஏற்றுக்கொண்டு எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் அவர்களது நம்பிக்கை வீண்போகாத வகையில் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு  நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது. மக்களை உசுப்பேற்றி, சூடேற்றி, உணர்ச்சியூட்டி  வாக்குகளை அபகரித்துக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாணசபையினூடாகவோ அன்றி தாம் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற ஆசனங்களினூடாகவோ  தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய சூழல் தமக்கானது என்பதை உணர்ந்துகொண்டுள்ள மக்கள் இனிமேலும் ஏமாற்றமடையாது தமக்கான அரசியல் தலைமையாக எம்மை தெரிவு செய்வதனூடாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இந்த மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலை இருந்தபோதும் அதனை தீர்த்துவைப்பதில் சுயநல தமிழ் அரசியல் தலைமைகள்  பாராமுகமாக இருக்கின்றமையானது வேதனையளிக்கின்றது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


காங்கேசன்துறை துறைமுகத்தின் இன்றைய நிலை என்ன ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...