அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 14th, 2017

விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் சாதாரண வாழ்க்கையில் மட்டுமல்லாது பொது வாழ்க்கையிலும் இருக்கவேண்டும். அவ்வாறான ஒரு களம் அமையப்பெறும் போதுதான் குடும்ப வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் சம அந்தஸ்துக்களுடன் தலைநிமிர்ந்த செயற்பட முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (14) நடைபெற்ற கட்சியின்  மகளிர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெண்களுக்கு சமத்துவ அந்தஸ்தை வழங்கவதே எமது பிரதான நோக்கம் என்பதுடன் சமூக மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் பெண்களின் பங்கும் அவசியமாக அமையப்பெற்றுள்ளது என்பதை யாவரும் அறிவார்கள். கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக சமூகத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க கட்சியின் மாதர் அமைப்பொன்றை நிறுவுவதற்கு நாம் எண்ணியுள்ளோம்.

இவ்வாறான ஒரு அமைப்பினைக்கொண்டு கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் வாழும் மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை வழர்த்தெடுப்பதற்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

இதற்கு ஒவ்வொருவரும் உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் கட்சியின் கொள்கை வழிநின்று செயற்படவேண்டும். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காணவேண்டுமாயின் அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானதாக தற்கால வாழ்வியல் உருவாக்கம் கண்டுள்ளது.

எனவவே கட்சியின் சார்பாக அமைக்கப்படவுள்ள பெண்கள் அமைப்பு எதிர்காலத்தில் முன்னுதாரணமாக செயற்பட்டு மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடனான பங்களிப்பை வழங்குவதற்கு எமது கட்சியும் முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related posts: