அரசியலமைப்பு பேரவையின் செயற்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தா தெரிவு
Tuesday, April 5th, 2016புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக இன்று (05) மாற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாட்டுக்குழுவில் 21 பேர் தெரிவு செய்யப்பட்டனர். குறித்த பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்களுள் ஒருவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி உப தலைவர்களாக ஏழுபேரும் வழிநடத்தல் குழு உறுப்பினர்களாக 21 பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாக
ரணில் விக்கிரமசிங்க
லக்ஷமன் கிரியெல்ல
நிமல் சிறிபால டி சில்வா
டக்ளஸ் தேவானந்தா
ரவூப் ஹக்கீம்
விஜயதாஸ ராஜபக்ஷ
சுசில் பிரேமஜயந்த
ரிஷாட் பதியுதீன்
சம்பிக்க ரணவக்க
டி.எம். சுவாமிநாதன்
மனோ கணேசன்
மலிக் சமரவிக்கிரம
இரா. சம்பந்தன்
அநுரகுமார திஸாநாயக்க
டிலான் பெரேரா
தினேஷ் குணவர்தன
ஜயம்பதி விக்கிரமரட்ண
எம்.ஏ. சுமந்திரன்
துஷிதா ஜயமன்ன
பிமல் ரத்னாயக்க
பிரசன்ன ரணதுங்க
உப தலைவர்களாக….
திலங்க சுமதிபால
செல்வம் அடைக்கலநாதன்
கபீர் ஹாசிம்
சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
திலக் மாரப்பன
மஹிந்த யாப்பா அபேவர்தன
நலிந்த ஜயதிஸ்ஸ
உப தலைவர்களின் பெயர்களை அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழிமொழிந்தார்.
வழிநடத்தல் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக முன்மொழிய சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே வழிமொழிந்தார்.
Related posts:
|
|