அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
Wednesday, June 1st, 2016
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அக்குழுவின் உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ். தவராஜா, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளித்தார்.
மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை நேற்று (31.05.2016) பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபா நாயகர் கருஜெயசூரிய ஆகியோரிடம் இன்று (01.06.2016) கையளிக்கப்பட்டது.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு குறித்த அறிக்கையை, குழுவின் உறுப்பினர் எஸ். தவராஜா கொழும்பிலுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் வைத்து இன்று கையளித்தார்.
மேற்படி மக்கள் கருத்தறியும் குழுவுக்கு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு யோசனையாக, அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, மதச்சார்பற்ற அரசு, தேசியக் கொடியில் பன்மைத்துவம், மாநில சுயாட்சிக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள், அர்த்தமுள்ளவகையில் தமிழ்மொழி அமுலாக்கம் போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வு பரிந்துரைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் ஒரு உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தின் சிபார்சில், எஸ். தவராஜா அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி அறிக்கையை www.yourconstitution.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
Related posts:
|
|