அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 30th, 2021

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும் கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்றையதினம் நடைபெற்றது.

நாட்டை தற்போது அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் கடற்றொழில் அமைச்சினூடாக மக்கள் நலன்சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டங்களை தாமதங்களோ அன்றி தடங்கல்களோ இன்றி மக்கள் தமது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படும் பொறிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவான புரிதலையும் இலகுவான நடைமுறைகளையும் ஏற்படுத்திக்’ கொடுப்பதற்கும் துறைசார் அதிகாரிகளூடாக குறித்த தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமான ஆலாசனைகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடிய...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...