அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

பாரபட்சமற்ற முறையில் நாடு முழுவதும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணத்திற்கமைவாக நீர்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் ,அணைக்கட்டுக்கள் அபிவிருத்தி செய்தல் வேலைத்திட்ட நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதனிடையே இன்று காலை யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமாகியுள்ள Sun shopping mall வர்த்தக தொகுதியை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடா வெட்டி வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|