அம்பாறையில் விவசாயக் காணிகளை வன ஒதுக்குக் காணிகள் என்று அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துக – டக்ளஸ் M.P.வலியுறுத்து

Tuesday, November 21st, 2017

அம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமுடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டுமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாய கண்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமார் 717 குடும்பத்தினர் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதியையும், 1673/45ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக மேற்படி காணி ஒதுக்கு வனம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது முதற்கொண்டு மேற்படி விவசாய செய்கையாளர்களுக்கு புரிந்துணர்வு அடிப்படையில் சொற்ப காணிகளில் விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் வன  இலாக்காவினர் அதற்குத் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். மேற்படி 717 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படக் கூடிய ஏற்பாடுகள் எவை? அவ்வாறு, மேற்படி விவசாய மக்களுக்கு பாதகமற்ற வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதனை விரைந்து எடுத்து, செயற்படுத்த முடியுமா? என்றும் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பினார்.

இன்று நாடாளுமன்றத்தில் (21.11.2017) சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர், மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள், மேற்படி விவசாய மக்கள் கடந்த 2017.11.04ஆம் திகதி வட்டமடு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இரண்டு தினங்கள் ஈடுபட்டு, தங்களுக்கான தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அப்போராட்டத்தினை அக்கறைப்பற்று நகருக்கு மாற்றி, அதைத் தொடர்ந்து வருகின்றனர்.

மேற்படி காணிகள், 333/3ஆம் இலக்க விவசாயக் காணிக்கான அதி விN~ட வர்த்தமானி மூலமாக 1985ஆம் ஆண்டு ஏப்ரல மாதம் 04ஆம் திகதி அக்கறைப்பற்று கிழக்கு கமநல சேவை நிலையத்தின் நிர்வாக எல்லையாக அறிவிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விN~ட காணிக் கச்சேரி நடத்தப்பட்டு, 1979 முதல் 1985ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக மேற்படி விவசாயிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக் காணிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், அதன் தீர்ப்புகள் மேற்படி விவசாய மக்களுக்கே சாதகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே மேற்படி காணி தொடர்பிலான பிரச்சினையின் உண்மை நிலை என்ன? என்பதையும் ஆராய்ந்து அந்த மக்களுக்கு உரிய தீர்வுகள் விரைவாகக் கிடைக்க ஜனாதிபதி மைத்திரியாப சிறிசேனா அவர்கள் ஆவண செய்யவேண்டும் என்று அந்த மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts: