அம்பாந்தோட்டை கடலில் அனர்த்தம் – அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, January 9th, 2022

கடலில் தவறி விழுந்த காலிப் பிரதேச கடற்றொழிலாளர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட உடனடி நடவடிக்கை மூலம்  மீட்கப்பட்டுள்ளார்.

காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று (08.01.2022) புறப்பட்ட பல நாள் மீன்பிடிக் கலனில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவர் தவறுதலாக கடலில் வீழ்ந்தார்.

அம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் தவறி விழுந்த குறித்த கடற்றொழிலாரை மீன்பிடிப் படகுகள் மூலம் தேடுதல் நடத்தியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்தவிற்கு கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடற்படையினரின் ஒத்துழைப்புக் கோரப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பயனாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் விரைவான செயற்பாடு காரணமாவே குறித்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரதேச மக்கள், அவசர வேளையில் தேவையான  ஆலோசனைகளை கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவ...
உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்:- திணைக்களங்களின் பிரதானிகளுக்க...