அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா: பிரதமர் மஹிந்தர் திட்டவட்டம்

Thursday, July 2nd, 2020


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என்று தமிழ் ஊடக ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: