அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Monday, November 5th, 2018வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளும், அதன் உற்பத்திகளும், எமது கடற்தொழிலாளர்களுக்கு உதவியாகவும், தரமானதாகவும், நியாயமான விலையில் கிடைப்பதாகவும் அமைந்திருக்கவேண்டும். தரமற்ற பொருட்களையோ, அதிக விலைச்சுமையையே மக்கள் மீது சுமத்துவதாக எந்தச் செயற்பாடும் இருக்கக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்று (04.11.2018) மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற வடகடல் நிறுவனத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
வடகடல் நிறுவனத்தை செயலூக்கம் உள்ளதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் செயற்படுத்த வேண்டும் என்று முன்னர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். இடையில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னரான நிர்வாக மாற்றங்களும் எவ்வாறான செயற்திட்டங்களை செய்து முடித்திருக்கின்றார்கள் என்பது தெரியாது.
அவை கடந்தவையாக இருந்தாலும், அந்த நிறுவனத்தை சரியான பாதையில் முன்கொண்டு செல்லவேண்டும். அதன் கொள்வனவுகள், விற்பனைகள் தொடர்பான விடயங்களில் எவ்விதத்திலும், முறைகேடுகளுக்கோ, து~;பிரயோகங்களுக்கோ நான் இடமளிக்கப்போவதில்லை. பொதுவாக நான் அந்தப் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் எந்த நிறுவனத்திலும் நான் தவறுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை.
எனவே வடகடல் நிறுவனமானது, தரமான உற்பத்திகளை தயாரிப்பதிலும், தரமான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதிலும் கூடுதல் கவனமாகச் செயற்படுவது அவசியமாகும். அதேபோல் அந்த நிறுவனத்தை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலன்களையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களும், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களும், வடகடல் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
|
|