அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் உருவானது!

Monday, May 31st, 2021

குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சந்தை வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: