அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று 11) நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா zoom செயலி ஊடாக திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாட வென மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
பொருத்தமான திட்டங்களை இனங்காணவும் நடைமுறைப்படுத்தவுமென இம் முறை நிதி அமைச்சு வெளியிட்டிருந்த விசேட சுற்றுநிருபத்தின் பிரகாரம் பொருத்தமான முன்மொழிவுகளை வகைதெரிவதற்கான ஆலோசனைகளை zoom செயலி ஊடாக கௌரவ அமைச்சர் அவர்கள் இச் சந்திப்பில் வழங்கி இருந்தார்.
வறிய குடும்பங்களுக்கான மின் இணைப்பின் அவசியம், பொருத்தமான அவசியமான மதகுகள், பாலங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள், காட்டு விலங்குகளில் இருந்து பயிற்செய்கையை பாதுகாப்பதற்கான திட்டத்தின் அவசியத்தை மாவட்ட அமைப்பாளர் தவநாதன் இச் சந்திப்பில் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த தொடர்பாடல் இணைப்பில் கலந்து கொண்ட திணைக்கள தலைவர்கள் துறைசார்ந்து அவசியம் முன்னுரிமைப்படுத்த வேண்டிய திட்டங்களை அமைச்சர் அவர்களின் கவனத்திற்காக சுட்டிக் காட்டி இருந்தனர்.
இத் திட்டத்துக்காக நிதி அமைச்சின் சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களின் சுருக்கத்தை திட்ட மிடல் பணிப்பாளர் தெளிவாக எடுத்து கூறினார்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் (காணி), மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
000
Related posts:
|
|