அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அதிகாரி இடையே விஷேட கலந்துரையாடல்!
Wednesday, November 15th, 2023சிலாபத்தில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைத் தொகுதிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்பது தொடர்பாக மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அதிகாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கலந்துரையாடினார். விரைவில் உரியவர்களுக்கு குறித்த புதிய கடைத்தொகுதிகளை பகிர்ந்தளிக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இதனிடையே
ஒருநாள் படகுகளுக்கு காலநிலை அவதானிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள் செய்திகளை உடனுக்குடன் தொலைபேசி ஊடக பெற்றுக் கொள்ளும் வசதியை டயலொக் நிறுவனம் தயாரித்துள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து டயலொக் நிறுவன அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இதுபோன்ற வசதிகளை ஏற்கனவே டயலொக் நிறுவனத்தினால் கடற்றொழிலிளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் தற்போது இச்சேவைகளை மேலும் மேம்படுத்தியுள்ளதாக டயலொக் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
000
Related posts:
|
|