அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!

இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்தி தினமாகும்.
அமைச்சரது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மற்றும் அத்தியடி பிள்ளையார் ஆலயங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பூசை வழிபாடுள் நடைபெற்றன.
அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல இடங்களிலும் ஆலய பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்து மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|