அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது கடற்றொழில் திணைக்களம்!

Tuesday, May 12th, 2020

யாழ். தொண்டமானாறு மற்றும் உப்பாறு ஆகிய நீர்நிலைகளில் பெருந் தொகையான இறால் அறுவடைக்கு தயாராகியிருக்கின்ற நிலையில் அவற்றை அறுவடை செய்வதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் வளங்கியுள்ளது.

அந்தவகையில் உப்பாற்றில் 135 மீனவர்களுக்கும் தொண்டமானாற்றில் 145 மீனவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அடிப்படையில் உப்பாற்றில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதியிலிருந்து அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 கிலோகிராம் இறால் அறுவடை செய்யப்படுவதாகவும் தொண்டமானாற்றில் கடந்த ஏப்ரல் 31 ஆம் திகதியிலிருந்து அறுவடை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 300 கிலோகிராம் இறால் அறுவடை செய்யப்படுகின்றது.

நன்னீர் மற்றும் பருவகால நீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் வளர்ப்பை அபிவருத்தி செய்யும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிட்ட இரண்டு நீர் நிலைகளிலும் சுமார் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன.

குறித்த திட்டத்தின் முதற்கட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்;த இறால் குஞ்சுகள் தற்போது அறுவடைக்கு தயாராகியிருக்கின்ற நிலையில் அவற்றை அறுவடை செய்வதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் வழங்கியுள்ளது.

அத்துடன், குறித்த நீர்நிலைகளில் அறுவடை செய்யப்படுகின்ற இறால்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைப்பதாக தெரிவிக்கும் பிரதேச மீனவர்கள், தற்போதைய அசாதாரண சூழலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனமான  செயற்பாட்டு தங்களுக்கு சிறந்த வாழ்வதாராமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா...
பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி ம...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்...

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  - கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் ...
எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து - நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு நீர்கொழும்பு களப்பு பிரதேச மக்கள் அமைச்சர...
யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெர...