அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

Tuesday, June 29th, 2021

நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்போது, வடகடல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கொவிட்  தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி வினைத் திறனான செயற்பாடுகளை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள் தெடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: