அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
Thursday, April 18th, 2024
……
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் அனுமதி வழங்குவதற்கான கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவரும் வடக்கின் ஆளுநருமான திருமதி சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில்( 18.04.2024) நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் வீட்டுத்திட்டம், காணி விடுவிப்பு, குடி நீர் வழங்கல், வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு, விவசாய நலன்கள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் (பதில்), மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன்,மற்றும் பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் நஅரச நிறுவனங்களிம் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|